Saturday, May 12, 2012

திருமண வாழ்த்து!


திருமண வாழ்த்து!

தமிழ் வாழி! தலைநகர் வாழி!
திருமணம் வாழி!
இருமனம் இணைய வாழி!
தமிழ் மனம் கமழ வாழி!
நறுமணம் பூக்க வாழி!
வாழி! வாழி! வாழி!

தமிழ் பா கொண்டு
எழுதிய வாழ்த்துப்பா!
இது தமிழிலக்கணம்
சொல்லாத தனிபா!

அனால்
களிபில்லாமல்
எழுதிய
கலிப்பா!

காப்பியம் காணாத ஆசிரியப்பா
வெண்பா
வஞ்சிப்பா
கலிப்பா!

ஏதுமில்லை இங்கு
ஹர்ஷா!
உன் திருமண
வாழ்தித்து- !

செந்நெல் பூமியில்
செம்மொழி விளிம்பில்
செம்மையுள் செழுமை என
செய்திட காதல்- இன்று
செய்தன திருமண விழ
இஃது இருமனம் முன்னம்
இணைந்ததின்
நிலை விழா!

முன்னம் ஒருபடி
நீ எடுத்தபடி
சற்றே விழுந்தபடி
உன்னை தாங்கியபடி
வந்தது ஒரு கைப்பிடி
அன்னை தமிழின் காரிகை!
உன் குல விரித்திகை!!
அவள் உனக்கு கை!!!

தமிழ் படி- என்றும்
தமிழின் தன்னிலை படி
நீ படி படி படி
என படி படியாய் உயர்ந்தபடி
புகழால் வாழ்ந்தபடி
உங்கள் வாழ்வு தழைத்த படி
என் தமிழின் சொற்படி
உன் வாழு ஏறுக பல ஏணி படி!

அப் படி எதுவும் இறந்காபடி
இப்படி ஒரு வாழ்த்து உரைத்தபடி
உம படி உயர்ந்தபடி
அமையட்டும் அவை ஏணி படி!

அஃது ஒவ்வொன்றும் தனி படி
என்றும் தலைகணம் இல்லாபடி
உம்மர் வாழ்வு ஒவ்வும் படி
எம்மார் கூற்று உள்ளபடி

உள்ளபடி என் உள்ளம் படும் படி
சொல்லிட்டேன் இவ்வாழ்த்து!- இதை படி!
நிதம் ஒரு வாழ்த்து படி
நீ உதாரணம் செய்க சான்று படி!

உன் படி அமையட்டும் அவள் படி
அவை திருப்பம் தரும் படி
எல்லாம் திரு பொற் படி
உன் வாழ்வு வாழ்க தமிழுள்ளபடி!

பெட்பார் எழுதிட்டேன்!
நட்பார் வாழ்த்திடேன்!
கேட்பார் செப்பிடுவேன் மற்றும் ஓர் வாழ்த்து!
கொள்ளத் தகுந்தவன் நீ!- கொள்!!!

அன்பின் கண் சிவம்- என்று
இன்-சகத்து இல்லாவிடின்- சிவம்
சால் அன்பும் வீண்!!!

என்றும் அன்புடன்
 மோ. மனோஜ் மண்டேலா

திருபூட்டு தமிழ்கூடல்


திருபூட்டு தமிழ்கூடல்


தமிழால் வாழ்ந்து வாழ்வில் உயர்வோம்!
தமிழை வாழ்த்தி வாழ்வில் உய்வோம்!
தரணி காண தமிழ் வழி உழைப்போம்!
தடங்கல் நீங்கி தமிழால் உயர்வோம்!

தடங்கல் தமிழுள் நீங்கி
மொழியை அமிழ்தம் பொழுகி
நற்றமிழை
நறுமணம் கமழ
நல்லதோர்
இலக்கணம் செய்திட்ட
அகத்தியம்
அதன் தமிழ் காப்பினும்
பருகி
பற்றால் உணர்ந்திட
பற்றுதலால் பற்றோடு
பலரும் அதன் தமிழ் முறையோடு
அலைகடலென தமிழை பருகிட
அருந்திய மொழியை
கம்பனும் நல்லாளும்
இலங்கோடிகளும்
இளஞ்சேரனும்
பாரதியும் அவனுக்கோர் தாசனும்
வரதனும் கல்யாண சுந்தரனும்
அண்ணனும்
அவனுக்கோர் தம்பியும்
வாலியும்
வாலிக்கு சுக்ரீவனாமிவனில்லை
வைரமுத்துவும்
அள்ளி அள்ளி தமிழ் பருக
அதம் தமிழ் பருகிய
உமிழ்
உதடுகளில்
வழிய
வழிந்த நீர்
செந்நெல்லுள் பாய
பாய்ந்தபின்
முக்காலம் கொழிய
கொழித்த அன்னம்
திண்ண வன்னம்
அதன்
நக நுனிக்கு
இனையென
என் தமிழ்
என்பால்
கொண்டு
கொட்டிடுக
என
ஏனையோர் சபைமுன்
வாழ்த்து  வாழி வாழியென வரைந்திடேன்!
கட்கிணியாள் காதலன் காதல் வகைபுனைவாள்
உட்குடையன்  ஊர்நாண் இயல்பினாள்- உட்கி
இடனறிந்து ஊடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண்!
என வெண்பா பாடி
நாலடியில்
அளந்தாலும்
அவள் மாட்
புகழை
அச்சம் மடம்
நாணம் பயிர்ப்பு
குகங்களை
அதன் கனைகளை கூற
நாநூறடிகள் தேவை
அத்தகு திவ்யா
சீர்மிகு பாவை!

இருக்கை எழலும் எதிர்செலவும் எனை
விடுப்ப ஒழிதலோடு இன்ன- குடிபிறந்தார்
குன்றா ஒழுக்கமாக் கொண்டார் கயவரோடு
ஒன்றா உணரற்பாற் நன்று!
நன்றே நல்கிட
அன்பில் உரைத்திட்ட
பண்பில் சிறந்திட்ட
குணாளன்
இத்திரு மணாளன்
அவனோடு துணைவரட்டும்
ஆதியந்தமில்லாத
சிவா!
தந்தைக்கு பிரவணம் கூறி
மறை காத்தான்
ஒருவன்- சிவகுமாரன்!

தந்தையின் பிரபாவம் காத்து
தன்பால் தழைதிட்டான்
ஒருவன்- இச் சிவகுமாரன்!

மங்கையரிட்ட
மாக்கோலம் கொண்ட
மணியாடும்
மணமேடையின்
எட்டுத்திக்கிலும்
எட்டு
எட்டு மலர் தோரணங்கள்
கமழ கமழ...

வேந்தர்கள்
வாத்திய கோஷங்கள்
பல்லிசை பாடி
பலவண்ணம் பன்னிசைத்து
பரமனருள் நாடி- இறையமுது
பொழிய பொழிய...
அக்கினி துணையாய்
அவிர் பாகம் அளித்து
திருமறைகலோதி
திரு அந்தணர்கள்
அரித்தம் பூசிய
அரியும் அரனும்
அருள் செய்த
திருமாங்கல்யம் எடுத்து தர
திருபூட்டு விழா செழுமையாய்
நடக்க நடக்க...

ஒருநூறு பேருக்கும்
ஓரைந்து பேருக்கும்
மைத்துனன்  என்ற
அம் மன்னனை அன்று போல்
அருளிட வேண்டுகையில் ,
பாம்பின் மேல் படுத்தவன்
பாம்பின் மேல் பரதம் ஆடியவன்
பாம்பின் பகை மேலேறிவந்து
பாக்கியம் பல அருளட்டும்!

வயது ஒன்று கூடிய இருபத்தேழும்,
வயது மூன்றேழும் ,
மாலை மாற்றிட
மங்களம் வாழ்த்தட்டும்,,
வாழியென பாரேழும்
வார்கடல் நீரேழும்!
ஈரின் செழுமை ஓலை காட்ட,
நாரின் செழுமை மாலை காட்ட,
வேரின் செழுமை சோலை காட்ட,
தேரின் செழுமை  சாலை காட்ட,
காரின் செழுமை வயல் காட்ட ,
நீரின் செழுமை கயல் காட்ட ,
ஏரின் செழுமை வயல் காட்ட,
நீரின் செழுமை அன்னவயல் காட்ட.,
உறுமி உடுக்கை
தப்பு தாரை
முழவு மேளம்
வாத்தியங்களுடன்
வாழி வாழி யென
வாழ்த்திடுவேன்;

உயிரென இல்லறம் அமைய
மெய்யென நல்லறம் புனைய
உயிர்மெய்யாய் வாழ்வு ஓங்கிட
திருமண வாழ்துதும்! திருமண வாழ்துதும்!

என்றும் அன்புடன்,
மோ. மனோஜ் மண்டேலா
_________________________________________________________________________________________________________அன்பின் கண் சிவம்- என்று
இன்-சகத்து இல்லாவிடின்- சிவம்
சால் அன்பும் வீண்!!!
___________________________________________________________________________________

ஒரு நூறும் புகுக!


ஒரு நூறும் புகுக!
எண்பதுகளில்- அடி
எடுத்துவைக்கும்
எம்மைக்கும்
எந்தையே!
நான் மணிகளின்
தந்தையே!
உம்மை வாழ்த்துவதிலில்லை
விந்தையே!
தமிழ் கொண்டு
தமிழ் எட்டு- என
சொல்லுவது என்
சிந்தையே!

ஆமூர் நகரத்தின்
ஆலமர விதையே!
அச்சம்மா எனும்
சீதையிட்ட விதையே!
கிருஷ்ணசாமி பிள்ளையே!
நின்பார்
நிலை பெற்றது
பல குலம் - அஃது உன் வித்தையே!

நீ கண்டதோ
பெரியாரின் தடி
அண்ணாவின் பொடி
கலைஞரின் வசனப் பொடி!
தனை
கொண்டு
செய்தாய்
பிள்ளைகளை இப்படி
இப்படி பல படி
ஏறி வந்த நீ- ஏணிப்படி!
புகழால் வாழ்ந்தபடி
உங்கள் வாழ்வு தழைத்தப்படி
என் தமிழின் சொற்படி
உன் வாழ்வு ஏறுக பல ஏணிப்படி!
என்றடி கூற்றடி படி
என்றும் வாழி! வாழி!- என
தமிழால் வாழ்த்திடுவேன்!
தலையால் வணங்கிடுவேன்!
உம்மை வாழ்த்த என்
வயது சிறிது!
தண்டமிழோ பெரிது!
தனை கொண்டு
வாழ்த்துவேன்!
தமிழுக்கு உம்மை வாழ்த்த
தரமுண்டு- வாழ்த்திய வண்ணம்
தழைக்க நீ- பல
தலைமுறை கண்டு!

எம்மைக்கும் எந்தையே
என் தாத்தாவே!
உன்
உடல் வலிவும்
மன வலிவும்
மெம்மேலும் மிகுக!!
நீ ஒரு நூறும் புகுக!!!

 





என்றும் அன்புடன்
மோ. மனோஜ் மண்டேலா



அன்பின் கண் சிவம்- என்று
இன்-சகத்து இல்லாவிடின்- சிவன்
சால் அன்பும் வீண்!