Saturday, December 10, 2011

திருபூட்டு தமிழ்-கூடல்!


நீதியின் காட்சியுமன்று- கால்
நீங்கின் மாட்சியுமன்று!
திராவிடப் போருமன்று
போர் வாழாய் சுழன்றதமன்று!
பாசத்தின் உயர்விடமாய்
அறிவாலயமன்றோ!

முத்தமிழ் பேசாத முச்சங்கம் காணாத
மூவேந்தர் படைசூழ முப்பால்முன் சொல்ல
இருமனங்கள் இணைய
இனிய நாள்! திருமணத்திருநாள்!

சூரியன் விழித்தெழ மதுரம் செம்பூ!
செம்பூ சேரின் நாரும் நாறும்
வாழை நாரும் நாறும்
நாரும் வாழி! ஆறுபோல் வாழி!

ஆழிமணியாய் மணிமாணிக்கமாய்
நீல வண்ண கண்ணன் புடைசூழ
வந்திடுக நல்லுலகிற்க்கு
மனம் போல் வாழி! தமிழ் போல் வாழி!

நல்லறம் பொன்மொழியாய்!
இல்லறம் செம்மொழியாய்!
என்றும் தமிழாய்
உயிர்மெய்யாய் வாழி!

திருமண வாழ்வு வளம் பெற வாழுத்துக்கள்!!!


என்றும் அன்புடன்,
மோ. மனோஜ் மண்டேலா!

(A gift to Mrs. Veena Ramesh as her marriage gift.
02 November 2011)

Wednesday, September 14, 2011

Gift to Vivek




அன்புடன்,

முக்கடல் சங்கமிக்கும் நாட்டில்
முத்தமிழ் உருவெடுத்த இடத்தில்
முப்பால் கொண்ட வள்ளுவன்-
செப்பிய

"தோன்றின் புகழோடு தோன்றுக"

என்ற வாக்கு பொய்க்கா வண்ணம்
பாரதம் பெருமை செய்த
பாரதபுதல்வனாய்,
வெற்றியை, அதன் சுவையை
என்றும் நீங்கா வண்ணம்
உன்னை கொண்டோற்க்கு
திக்கெட்டும் முரசு கொட்டிட
அன்பின் உருவாக
வெற்றி பரிசினை எடுத்துவா!!!
சிலம்பும் மணியும் பிரியா?
அஃது போல் நம் நட்பும்
வாழையடி வாழையாய்

தொடரட்டும்...!!!

என்றும் உன் நினைவில்,
1100
மோ. மனோஜ் மண்டேலா!

27 July 2009
(on the sendoff party toVivek Mahadevan)



Gift to Arun



அன்புடன்,

முழுமதியின் ஒளியாய்
ஆம்பல்தன் வீசமாய்
தமிழாய்,
அதன் பொருளாய்
பாரத தாயின்
பொற்பாதங்களில் மலர் சேர்க்க
அவள் கொண்ட ஆட்சி
மெய்திட,
அவளின் மகுடத்தில் ஓர்
மாணிக்கம் வைத்தாற்போல்
உன் புகழ்,
நாடெங்கும் தமிழெங்கும்
பாலோடு தேன் கலந்தாற்போல்
எதுகையும் மோனையும் போல்
என்றும் ஒன்றாய் அமைந்திட
தடங்கள் வரின்- அதை
வென்றிட!!

தோல்வி நீ சுவைப்பதில்லை
எங்கள் தோள்கள் பல உள்ள வரை;
வெற்றி உன் அருகில் உண்டு
ஜெயம் உன் பக்கம் உண்டு
செண்டு வா,
" தமிழனாய் 'வென்று' வா "!!!

என்றும் உன் நினைவில்,
1100
மோ. மனோஜ் மண்டேலா!

27 July 2009
(on the sendoff party to Arun Ashok)


















Convocation Wishes!!!



கல்வி சான்றிதழ் பெற்ற நண்பனுக்கு,



"இது உன் பட்டம் கூறும் சொற்கள்"

கொடுத்து வைத்த
காகிதம்
உன்னை பற்றி எழுதுவதால்
புண்ணியம் செய்த
எழுத்துக்கள் 
உன்னை பற்றி வர்ணிப்பதால்
முத்தம் பெற்ற
மைத்துளிக்கள்
உன்னை தொட்டு போவதால்

வெள்ளை காகிதமோ
ஒரு கவிதைதான்
அதில்
உன்னை எழுதும்போது
கவிதைக்கே பூச்சுடல் தான்

என்னதான் சொல் !!!
உன்னை விட
உண்மையான
கவிதை இருக்கின்றதா???

இருப்பின்
அது
உன் பிரிதி
அந்த
கவிழன்
உன் நிழல்

எப்பட்டம் நீ அந்த
நிழலை படைதோர்க்கு
அளிக்கும் அன்பு கடமை
உன் கடமையின் பரிசு!!!!

பிறக்கும் போதே
விழிகள் மூடி தான்
பிறக்கின்றோம்
புதிதாய்
உலகை கான்பாதற்கு
பிறக்கும் போதே
வலியோடுதான்
பிறக்கின்றோம்
அழகாய் உலகியமைப்பதர்ற்கு
பிறந்தஉடன்
அழியாத உயர்க்கு
அர்த்தம் கொடுத்திட்ட வண்ணம்
தாய் மகிழ
தமிழ் மகிழ
தாரணி போற்றிட
இன்று நீ கண்டாய்
ஓர் புது உலகம்
சான்றோன்னாய்....
கல்வி மேதையாய்...
வாழ்த்துக்கள்!!!!
நீவீர் வாழி!!
உம் பட்டம் வாழி!!!
               
தமிழ் மீது கொண்ட பாசமோ?
வள்ளுவன் செப்பிய வாக்கின் பொருளோ??
கல்வி மீது கொண்ட அன்போ ???
அதன் சுவையை பகிர்ந்திட ஆசையோ???

சேய் மீது தாய் கண்ட அன்பின் சுடராய்
மாணவன் தன்னை  கண்ட குருவாய்
இன்று நன்னாள்
தமிழுக்கு பொன்நாள்
தாய்க்கு இனியநாள்
கன்னி மாதம் கண்ட திருநாள்
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தாய்,
கல்வி கண் திறக்கும் குரு,
உலகோர் அனைவரும் வாழ்த்தும் வண்ணம்
இன்றோ பட்டம் அளிக்கும் விழா!!!

இது ஈன்றோரின் அவா

அதனை செய்த நீவீர் வாழி!
சான்றோன் என்ற மக்கள் வாழி!!
தாய் வாழி!!!
பல்கலைகழகம் வாழி !!!!
சான்றோன் வாழி!!!!!

இது உண்மையின் உரைகுரல்
உன் வாழ்வின் மடல்
இது கல்வியின் medal
உன் மகுடத்தின் வைரமாய்- வெற்றி
பல உண்டு
ஜெயம் உன் பக்கம் உண்டு.

மேல்மக்கள் அனைவரும் வாழி!!!"


அன்பும் வாழ்த்தும்,
மோ.மனோஜ் மண்டேலா!
10 October 2010
(on the day of Convocation at SASTRA University on award of B.Tech)

Sunday, September 11, 2011

புதுமனை புகுவிழா வாழ்த்து!



புதுமனை புகுவிழா வாழ்த்து!


கூடுதன்
ஓடு உடைத்து
சிறகடித்து பறக்கும்
பறவை உனக்கு
உன்வெற்றி புகழும்
வாழ்த்திது!

தமிழ்கூறும் தொல்லுலகத்து மக்கள்தோறும்,
இங்கோ! ஏன் தொல்லுலகமென்று வியப்பெழலாம்?
தமிழ்கூறும் நல்லுலகமன்றோ இதுவென்று- என் செய்வது
இங்கோ தமிழோர் சிலரே! ஆள்பவரும் இல்லை தமிழர்!
தமிழை ஆள் வோரும் இல்லை!
தொல்லுலகத்திலோ தமிழர் இருந்தனர்- அதன்
பொருட்டு இங்கோ நல்லுலகம் ஏது? ஆதலால் தொல்லுலகம்!
அதன் மக்கள் கூறும் தமிழ் வாழ்த்து!

உன் வெற்றிகண்டு கண்மூடுகையில்
சிந்தனையில் சிக்கியது இரகிசயம்!
அரவம்தன் நிவர்த்தி!!
அரங்கநாதனின் கீர்த்தி!!!

உணவு, உடை, இல்லம் முறையே
செய்தாய் நீ முறையே!
துணை வருவான் இறையே- என்றும்
துணை உன்னக்கு அவனே!


இரகசியம் இஃது
இடம் போருலேவல் என்றால்- இடம்
சிந்தை அன்றோ? அங்கே கண்டாய்
ஓர் இல்லம்! தன பொருட்டு வாழ்த்து!

வெண்பா எழுத கேட்டான் கண்ணன்!
பண்பா செய்திடுக என்றான் இம்மன்னன்!
அன்பா செப்பிடேன் ஓர் வாழ்த்து- தமிழ்
வெண்பா எதற்கினி என்று?!

அளபெடை எழுத இங்கோ அணியில்லை
தேமா புளிமா இங்கே தேவையுமில்லை!
தமிழ் உதித்தேழும் காலம்தோறும்- அழகிய
எழில் கலந்தோடி வாழி!

தமிழுனர்வோடு வாழி!
செயல்திறன் கொண்டு வாழி!
இலக்கணம் பொருள்பட வாழி!
அன்போடு வாழி!!!

என்றும் அன்புடன்,
மோ. மனோஜ் மண்டேலா
11 September 2011
(on occasion of Home Warming Ceremony of Aravind Sankaranarayanan)