Wednesday, September 14, 2011

Convocation Wishes!!!



கல்வி சான்றிதழ் பெற்ற நண்பனுக்கு,



"இது உன் பட்டம் கூறும் சொற்கள்"

கொடுத்து வைத்த
காகிதம்
உன்னை பற்றி எழுதுவதால்
புண்ணியம் செய்த
எழுத்துக்கள் 
உன்னை பற்றி வர்ணிப்பதால்
முத்தம் பெற்ற
மைத்துளிக்கள்
உன்னை தொட்டு போவதால்

வெள்ளை காகிதமோ
ஒரு கவிதைதான்
அதில்
உன்னை எழுதும்போது
கவிதைக்கே பூச்சுடல் தான்

என்னதான் சொல் !!!
உன்னை விட
உண்மையான
கவிதை இருக்கின்றதா???

இருப்பின்
அது
உன் பிரிதி
அந்த
கவிழன்
உன் நிழல்

எப்பட்டம் நீ அந்த
நிழலை படைதோர்க்கு
அளிக்கும் அன்பு கடமை
உன் கடமையின் பரிசு!!!!

பிறக்கும் போதே
விழிகள் மூடி தான்
பிறக்கின்றோம்
புதிதாய்
உலகை கான்பாதற்கு
பிறக்கும் போதே
வலியோடுதான்
பிறக்கின்றோம்
அழகாய் உலகியமைப்பதர்ற்கு
பிறந்தஉடன்
அழியாத உயர்க்கு
அர்த்தம் கொடுத்திட்ட வண்ணம்
தாய் மகிழ
தமிழ் மகிழ
தாரணி போற்றிட
இன்று நீ கண்டாய்
ஓர் புது உலகம்
சான்றோன்னாய்....
கல்வி மேதையாய்...
வாழ்த்துக்கள்!!!!
நீவீர் வாழி!!
உம் பட்டம் வாழி!!!
               
தமிழ் மீது கொண்ட பாசமோ?
வள்ளுவன் செப்பிய வாக்கின் பொருளோ??
கல்வி மீது கொண்ட அன்போ ???
அதன் சுவையை பகிர்ந்திட ஆசையோ???

சேய் மீது தாய் கண்ட அன்பின் சுடராய்
மாணவன் தன்னை  கண்ட குருவாய்
இன்று நன்னாள்
தமிழுக்கு பொன்நாள்
தாய்க்கு இனியநாள்
கன்னி மாதம் கண்ட திருநாள்
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தாய்,
கல்வி கண் திறக்கும் குரு,
உலகோர் அனைவரும் வாழ்த்தும் வண்ணம்
இன்றோ பட்டம் அளிக்கும் விழா!!!

இது ஈன்றோரின் அவா

அதனை செய்த நீவீர் வாழி!
சான்றோன் என்ற மக்கள் வாழி!!
தாய் வாழி!!!
பல்கலைகழகம் வாழி !!!!
சான்றோன் வாழி!!!!!

இது உண்மையின் உரைகுரல்
உன் வாழ்வின் மடல்
இது கல்வியின் medal
உன் மகுடத்தின் வைரமாய்- வெற்றி
பல உண்டு
ஜெயம் உன் பக்கம் உண்டு.

மேல்மக்கள் அனைவரும் வாழி!!!"


அன்பும் வாழ்த்தும்,
மோ.மனோஜ் மண்டேலா!
10 October 2010
(on the day of Convocation at SASTRA University on award of B.Tech)

No comments:

Post a Comment