Saturday, May 12, 2012

திருபூட்டு தமிழ்கூடல்


திருபூட்டு தமிழ்கூடல்


தமிழால் வாழ்ந்து வாழ்வில் உயர்வோம்!
தமிழை வாழ்த்தி வாழ்வில் உய்வோம்!
தரணி காண தமிழ் வழி உழைப்போம்!
தடங்கல் நீங்கி தமிழால் உயர்வோம்!

தடங்கல் தமிழுள் நீங்கி
மொழியை அமிழ்தம் பொழுகி
நற்றமிழை
நறுமணம் கமழ
நல்லதோர்
இலக்கணம் செய்திட்ட
அகத்தியம்
அதன் தமிழ் காப்பினும்
பருகி
பற்றால் உணர்ந்திட
பற்றுதலால் பற்றோடு
பலரும் அதன் தமிழ் முறையோடு
அலைகடலென தமிழை பருகிட
அருந்திய மொழியை
கம்பனும் நல்லாளும்
இலங்கோடிகளும்
இளஞ்சேரனும்
பாரதியும் அவனுக்கோர் தாசனும்
வரதனும் கல்யாண சுந்தரனும்
அண்ணனும்
அவனுக்கோர் தம்பியும்
வாலியும்
வாலிக்கு சுக்ரீவனாமிவனில்லை
வைரமுத்துவும்
அள்ளி அள்ளி தமிழ் பருக
அதம் தமிழ் பருகிய
உமிழ்
உதடுகளில்
வழிய
வழிந்த நீர்
செந்நெல்லுள் பாய
பாய்ந்தபின்
முக்காலம் கொழிய
கொழித்த அன்னம்
திண்ண வன்னம்
அதன்
நக நுனிக்கு
இனையென
என் தமிழ்
என்பால்
கொண்டு
கொட்டிடுக
என
ஏனையோர் சபைமுன்
வாழ்த்து  வாழி வாழியென வரைந்திடேன்!
கட்கிணியாள் காதலன் காதல் வகைபுனைவாள்
உட்குடையன்  ஊர்நாண் இயல்பினாள்- உட்கி
இடனறிந்து ஊடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண்!
என வெண்பா பாடி
நாலடியில்
அளந்தாலும்
அவள் மாட்
புகழை
அச்சம் மடம்
நாணம் பயிர்ப்பு
குகங்களை
அதன் கனைகளை கூற
நாநூறடிகள் தேவை
அத்தகு திவ்யா
சீர்மிகு பாவை!

இருக்கை எழலும் எதிர்செலவும் எனை
விடுப்ப ஒழிதலோடு இன்ன- குடிபிறந்தார்
குன்றா ஒழுக்கமாக் கொண்டார் கயவரோடு
ஒன்றா உணரற்பாற் நன்று!
நன்றே நல்கிட
அன்பில் உரைத்திட்ட
பண்பில் சிறந்திட்ட
குணாளன்
இத்திரு மணாளன்
அவனோடு துணைவரட்டும்
ஆதியந்தமில்லாத
சிவா!
தந்தைக்கு பிரவணம் கூறி
மறை காத்தான்
ஒருவன்- சிவகுமாரன்!

தந்தையின் பிரபாவம் காத்து
தன்பால் தழைதிட்டான்
ஒருவன்- இச் சிவகுமாரன்!

மங்கையரிட்ட
மாக்கோலம் கொண்ட
மணியாடும்
மணமேடையின்
எட்டுத்திக்கிலும்
எட்டு
எட்டு மலர் தோரணங்கள்
கமழ கமழ...

வேந்தர்கள்
வாத்திய கோஷங்கள்
பல்லிசை பாடி
பலவண்ணம் பன்னிசைத்து
பரமனருள் நாடி- இறையமுது
பொழிய பொழிய...
அக்கினி துணையாய்
அவிர் பாகம் அளித்து
திருமறைகலோதி
திரு அந்தணர்கள்
அரித்தம் பூசிய
அரியும் அரனும்
அருள் செய்த
திருமாங்கல்யம் எடுத்து தர
திருபூட்டு விழா செழுமையாய்
நடக்க நடக்க...

ஒருநூறு பேருக்கும்
ஓரைந்து பேருக்கும்
மைத்துனன்  என்ற
அம் மன்னனை அன்று போல்
அருளிட வேண்டுகையில் ,
பாம்பின் மேல் படுத்தவன்
பாம்பின் மேல் பரதம் ஆடியவன்
பாம்பின் பகை மேலேறிவந்து
பாக்கியம் பல அருளட்டும்!

வயது ஒன்று கூடிய இருபத்தேழும்,
வயது மூன்றேழும் ,
மாலை மாற்றிட
மங்களம் வாழ்த்தட்டும்,,
வாழியென பாரேழும்
வார்கடல் நீரேழும்!
ஈரின் செழுமை ஓலை காட்ட,
நாரின் செழுமை மாலை காட்ட,
வேரின் செழுமை சோலை காட்ட,
தேரின் செழுமை  சாலை காட்ட,
காரின் செழுமை வயல் காட்ட ,
நீரின் செழுமை கயல் காட்ட ,
ஏரின் செழுமை வயல் காட்ட,
நீரின் செழுமை அன்னவயல் காட்ட.,
உறுமி உடுக்கை
தப்பு தாரை
முழவு மேளம்
வாத்தியங்களுடன்
வாழி வாழி யென
வாழ்த்திடுவேன்;

உயிரென இல்லறம் அமைய
மெய்யென நல்லறம் புனைய
உயிர்மெய்யாய் வாழ்வு ஓங்கிட
திருமண வாழ்துதும்! திருமண வாழ்துதும்!

என்றும் அன்புடன்,
மோ. மனோஜ் மண்டேலா
_________________________________________________________________________________________________________அன்பின் கண் சிவம்- என்று
இன்-சகத்து இல்லாவிடின்- சிவம்
சால் அன்பும் வீண்!!!
___________________________________________________________________________________

No comments:

Post a Comment